தமிழக அரசின் சட்​டம் – ஒழுங்கு துறை தகவல்​களை ஆர்​டிஐ மூலம் பெறு​வதற்கு விலக்கு அளித்து பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை​யை, பல்​வேறு தரப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்து தமிழக அரசு வாபஸ் பெற்​றது.

அரசின் பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து பொது​மக்​கள் தகவல் அறி​யும் உரிமை சட்​டம் (ஆர்​டிஐ) மூலம் தகவல்​களை பெற்று வரும் சூழலில், சட்​டம் – ஒழுங்கு துறைக்கு இதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணையை வெளி​யிட்டது. மனிதவள மேலாண்​மைத்துறை செய​லா​ளர் சி.சமயமூர்த்தி வெளி​யிட்ட அந்த அரசாணை​யில், “சாதி மற்​றும் மத மோதல்​கள், விசா​ரணை கமிஷன்​கள் அமைத்​தல், துப்​பாக்​கிச் சூடு சம்​பவங்​கள், ரகசிய புல​னாய்வு விவரங்​கள், குண்​டர் சட்​டம் உள்​ளிட்ட தடுப்​புக் காவல் நடவடிக்​கைகள் போன்ற அதீத பாது​காப்பு சார்ந்த விவ​காரங்​களை இத்​துறையால் கையாளப்​படுகிறது.

இதனை பாது​காக்​கும் நோக்​கில் சட்​டப்​பிரிவு 24(4)-ன் கீழ் ஆளுநரின் ஒப்​புதலுடன், ஆர்​டிஐ-​யில் இருந்து சட்​டம் – ஒழுங்கு துறை தொடர்​பான தகவல்​களை பெறு​வ​தில் கட்​டுப்​பாடு விதிக்​கப்​படு​கிறது. உளவு மற்​றும் பாது​காப்பு பணி​களில் ஈடு​படும் அமைப்​பாக அறி​வித்து இந்த விலக்கு அளிக்​கப்​படு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த அரசாணைக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

பல்​வேறு தரப்​பிலிருந்​தும் எதிர்ப்​பு​கள் தீவிரமடைந்​ததை தொடர்ந்​து, தமிழக அரசு தனது முடிவை மறு​பரிசீலனை செய்து அரசாணை​யைத் திரும்ப பெறு​வ​தாக அறி​வித்​தது. இதுகுறித்து அமைச்​சர் சிடிஆர் நிர்​மல்​கு​மார் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “தகவல் அறி​யும் உரிமைச் சட்​டப்​பிரிவு 24(4)-ன் கீழ் பொது (சட்​டம் – ஒழுங்​கு) துறைக்கு விலக்கு அளித்து வெளி​யிடப்​பட்ட தமிழக அரசின் அரசாணை விலக்கி கொள்​ளப்​பட்​டுள்​ளது” என தெரி​வித்​தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal