‘‘மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்’’ என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில்தான், ‘‘ஆசைக்கு இணங்கும் எந்திரங்கள் இருக்க, ஆதவ்களுக்கு ஆணவச் சவால்கள் சாதாரணம்தானே..?’’ என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ‘‘ஆணவம்..’’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்,

‘‘ஆசைக்கு இணங்கும் “எந்திரங்கள்” இருக்க
ஆதவ்-களுக்கு
ஆணவச் சவால்கள்
சாதாரணம் தானே…

ஆனாலும்
ஒன்று

தேங்காயோ
பூசணியோ

தலைக்கு மேலே தூக்கப்படுவது
எல்லாமும்
ஒர் நாள்

தரையில்
போட்டு
உடைக்கப்படும்…

விசிலுக்கு
சங்கு ஊதும் வேளை
விரைந்து வருகிறது..

என்னநாஞ் #சொல்றது..’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal