திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் (எம்பி) அண்ணாதுரை வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

திருவண்ணமலை திமுக எம்பி அண்ணாதுரை. இவர் 2019 ஆம் ஆண்டு முதல் எம்பியாக இருந்து வருகிறார். இவருக்கு திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் என்ற பகுதியில் வீடு உள்ளது. அங்கு திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 20 -க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. திமுக ஆட்சியில் இவர் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணிகளை மேற்கொண்டது தெரியவந்தது. இவர் 50-க்கும் மேற்பட்ட லாரிகள், வீடு கட்டும் கான்கிரீட் மெஷின்களையும் பயன்படுத்தி நெடுஞ்சாலை துறை மூலம் ஒப்பந்தம் எடுத்து சாலை அமைத்தல், மேம்பாலங்களை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அவரிடம் அதிக அளவு பணம் சேர்த்துள்ளதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸுக்கு தகவல் கிடைத்தது. அரசு ஒப்பந்ததாரராக இருந்து வரும் அண்ணாதுரை வரி ஏய்ப்பு செய்துள்ளாரா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சோதனையின் முடிவில் தான் என்ன வழக்கு, எதற்காக சோதனை என்பது அதிகாரப்பூர்வமாக தெரியும். அண்மையில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என். நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal