‘நாளை உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றதிற்குள் வந்தால் உடனடியாக முதல்வரால் பதில் கொடுக்க முடியாது. வீட்டுக்குப் போய்தான் ட்விட்டரில் முதல்வரால் பதிவு போட முடியும். அதனால்தான் இந்த அவசர கைதோ..?’ என ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்.

மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் ‘‘புரியுது புரியுது’’ எனும் தலைப்பில்,

‘‘எங்கும் யார் பெயரையும் சொல்லாமல்
கடந்து போன காவேரித் தண்ணியில

இரட்டை அர்த்தம் இருப்பதாக
குற்றஞ்சொல்லி

அதிலும்
முதல் அர்த்தத்தை எடுத்துக்
கொள்ளாமல்

இரண்டாம்
அர்த்தம் என்கிற கற்பனையின்
மீது
கதைபுனைந்து எதிர்கட்சித் தலைவரை
பழிவாங்க
அலைவது ஏன்..

புரியுது
புரியுது…
ஏன்னா

உதயநிதி
சட்டசபைக்கு
வந்தால்
ஏகத்துக்கும் பட்டியலிட்டு
கேள்வி
எழுப்புவார்..

அதுக்கு வீட்டுக்குப்போயி ஆறுமணிக்கு
மேலே
ஆள்வச்சு எழுதி டிவெட்டர்ல
பதில்போடனும்

அதானே..

என்னநாஞ்

சொல்றது..?’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal