எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால், தமிழகம் முழுவதிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இதில் நடிகை திரிஷா மற்றும் விஜய் குறித்து ‘இரட்டை’ அர்த்தத்தில் பேசினார். இந்த விவகாரத்தில் உதயநிதியை கைது செய்த காவல்துறை, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘‘நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி சிut சிஷீஜீஹ் றிணீstமீ செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர். அதற்காக பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். சட்டரீதியாக சந்திப்பேன். இந்த கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், வீட்டின் முன்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தவிர தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

“நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்“ என திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கண்டித்துள்ளனர். அதே போல் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாயாணன், ‘‘விசாரணைக்கு மட்டுமே உதயநிதியை போலீசார் அழைத்துச் செல்லப்படுகிறார். கைது செய்யப்படவில்லை’’ எனக் கூறியிருக்கிறார். முன்னதாக, ‘‘உதயநிதி பெண் குறித்து மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்’’ என்ற வாதம் வைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றமும், ‘‘உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் இன்றைய நாள் முழுவதுமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal