தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் த.வெ.க. பக்கம் சென்றது. ‘காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது’ என தி.மு.க.வின் சீனியர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.க. வெளிநடப்பு செய்திருப்பது பா.ஜ.க.வை அதிர்ச்சியடை வைத்திருக்கிறது.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் இன்று (ஜூலை 19) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இருந்து திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20)தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடக்கிறது. இக்கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், டில்லியில் இன்று (ஜூலை 19) பா.ஜ.க, மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் ஜெயராம் ரமேஷ், திமுகவின் திருச்சி சிவா, அதிமுகவின் தம்பித்துரை உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி டில்லியில் இன்று (ஜூலை 19) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இருந்து திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கூட்டத்தில் மசோதா மீது எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விவாதங்களை முன் வைக்கவும், சுமூகமாக மழைக்கால கூட்டத்தொடரை நடத்த ஒத்துழைப்பு வழங்கவும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பவும், ‘இண்டி’ கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் அமளிக்கு பஞ்சமிருக்காது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal