மறை​முக பேரம் மூலம் எம்​எல்​ஏக்களை ராஜி​னாமா செய்ய வைக்​கின்​றனர் என்று பாஜக தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். அம்​பத்​தூரில் உள்ள தனி​யார் மண்​டபத்​தில் ஜனசங்​கத்​தின் நிறுவன தலை​வர்​களில் ஒரு​வ​ரான ஷியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் 125-வது பிறந்​த​நாள் விழா நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசும்போது, ‘‘ தவெக அரசுக்கு பெரும்​பான்மை இல்​லாத சூழலில், பிற கட்​சிகளில் உள்ள நபர்​களை ராஜினாமா செய்ய வைக்​கும் முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

தூய்​மை​யான ஆட்சி செய்​கிறோம் என கூறிக்​கொண்டு மறை​முக​மாக​வும், வேறு அழுத்​தங்​கள் மூலமும் மற்ற கட்​சி​யின் எம்​எல்​ஏக்​களை ராஜி​னாமா செய்ய வைக்​கின்​றனர். தங்​களுக்கு பெரும்​பான்மை கிடைப்​ப​தற்​காக பெரிய நாடகத்தை தவெக அரசு செய்து வரு​கிறது.

மக்​களின் தீர்ப்பை ஏற்று கூட்​ட​ணி​யுடன் ஆட்சி நடத்​தி​னாலும், குறுக்கு வழி​யில் பெரும்​பான்மை பெறு​வதற்​காக பணம் மற்​றும் அதி​கார பேரங்​களில் அக்​கட்சி ஈடு​படு​கிறது. இவர்​களின் செயல்​பாடு​கள் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் மாண்​புக்​கும் ஜனநாயகத்​துக்​கும் உரிய மரி​யாதை அளிக்​கிறதா என்ற அச்​சத்தை உரு​வாக்​கி​யுள்​ளன.

தலை​மைச் செயல​கம் அரசுப் பணிக்​கான இடமாக இல்​லாமல் கட்சி அலு​வல​க​மாக மாற்​றப்​பட்டு வரு​கிறது. அமைச்​சரின் தந்தை ஆய்வு செய்​வதும், கட்சி நிர்​வாகி​கள் புதிய பேருந்து வழித்​தடங்​களை தொடங்கி வைப்​பதும், மாநக​ராட்சி கூட்​டங்​களில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் அல்​லாத நபர்​கள் தலை​யிடு​வதும் தொடர்​கிறது.

அரசு விவ​காரங்​களில் தகு​தி​யற்ற நபர்​கள் தலை​யிடு​வதை முதல்​வர் கட்​டுப்​படுத்த வேண்​டும். தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​டு, பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​களும், கொலைகளும் அதி​கரித்து வரு​கின்​றன. 2 மாத ஆட்​சி​யில் ஆட்​சி​யாளர்​களின் முகம் மாறி​யுள்​ளதே தவிர, பெண்​கள் பாது​காப்​பில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்​லை.

காவல்​துறை சீருடை மாற்​றத்​தைத் தவிர வேறொரு மாற்​ற​மும் நடக்​க​வில்​லை; குற்​ற​வாளி​களுக்கு சட்​டத்​தின் மீது பயம் இல்லை என்​பது​தான் தினசரி செய்​தி​கள் மூலம் தெரி​கிறது. மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில், தமிழகத்​தின் அனு​மதி இன்றி எதை​யும் செய்​யக்​கூ​டாது என்று மத்​திய அரசு தெளி​வாக கூறி​யுள்​ளது. எனவே, கூட்​ட​ணி​யில் உள்ள அண்டை மாநில முதல்​வருடன் பேசி தமிழகத்​தின் நீதி​யை​யும் உரிமை​யை​யும் நிலை​நாட்ட வேண்​டியது தமிழக முதல்​வரின் பொறுப்​பாகும்​’’ இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal