தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

காலை 11 மணி நிலவரப்படி த.வெ.க. 100 தொகுதிகள், அ.தி.மு.க 78 தொகுதிகள், தி.மு.க. 56 ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 83 தொகுதிகளிலும், அதிமுக 58 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. திமுக 34 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்த ஆரம்பப் போக்கு திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டத்தில் தவெக 83 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 58 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த இரு கட்சிகளும் ஆரம்பத்திலேயே வலுவான நிலையைப் பெற்றுள்ளன. தவெக தலைவர் விஜய்யின் புதிய கட்சி முதல் முறையாகப் போட்டியிட்ட போதும் அதிகப்படியான இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவும் தனது பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்க வைத்து வலுவான தொடக்கத்தை அளித்துள்ளது. 10.30 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 83 தொகுதிகளிலும், அதிமுக 58 தொகுதிகளிலும், திமுக 34 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக, சிபிஐ, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கின்றன.

இந்த ஆரம்பகட்ட தடுமாற்றம் காரணமாக, சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இந்த முக்கிய நாளில் இந்த நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக, வெற்றி உறுதியாகத் தெரியும் வரை கூடாரங்கள் அகற்றப்படாது. தற்போதைய நிலவரம் தமிழ்நாட்டின் அரசியல் சூழலை பெரிய அளவில் மாற்றும். தவெக மற்றும் அதிமுகவின் வலுவான ஆரம்பம், திமுகவின் பின்னடைவு ஆகியவை தமிழக மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தவிர, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal