திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவர்களுடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அவரது கருத்துக்கள் ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியதாக அமைந்திருக்கும்.

இந்த நிலையில்தான் ‘அவரே தொடர்கிறார்…’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு தி.மு.க.வினரைத் தாண்டி அனைத்துக் கட்சியினரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்…

‘‘ மனச்சாட்சிய
தொட்டுச் சொல்லுங்க ..

அவர்
அளவுக்கு
ஓடி ஓடி
உழைச்சீங்களா…

அவர் அளவுக்கு
உரிமைகளை
காக்க
போராடுனீங்களா..

அவர் அளவுக்கு
கட்சியை கட்டுக்கோப்பா
ஒற்றுமையா
வச்சுக்கிட்டீங்களா…

அவர் அளவுக்கு
கூட்டணிய
பலமாக
கட்டுனீங்களா…

அவர்
அளவுக்கு
SIR பணிகளில்
கட்சியினரை
இறக்கீனீங்களா…

அவர் அளவுக்கு
திசையெட்டும்
திரும்பிப் பார்க்கும்
திட்டங்களை
கொடுத்தீங்களா .

அவர் அளவுக்கு களத்துல
கண்ணியமா
பிரச்சாரம்
செஞ்சீங்களா ..

அவர் அளவுக்கு
தேர்தல் அறிக்கையில
மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தீங்களா…

அவர் அளவுக்கு
யாராவது இப்பவரை
தேர்தல் முடிவுகளில்

மொதல்ல
நம்பிக்கையா
இருக்கீங்களா. .

அடப்
போங்க பாஸ்

Low risk low gain

High risk high gain

No risk no gain…

போங்க
போய் வேலைய
பாருங்க…

ஆரூரின்
தேர் அழகாய்
அவரே
தொடர்கிறார்…

அம்புட்டுத்தான்… ’’

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal