‘மூடா’ ஊழல் வழக்கில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுவரை இந்த வழக்கில் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். ‘மூடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்று (ஜூன் 10) சித்தராமையாவின் 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கில், இதுவரை 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal