எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியில் தொலைபேசியில் பேசிய விஜய், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் ஆதவ் அர்ஜுனா.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடம் தொலைபேசி மூலம் விஜய் நேரடியாகவே பேசி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கிற்கு, ‘விஜய்யைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி ரகசிய கட்டளை பிறப்பித்திருந்ததை எழுதியிருந்தோம் என்பது குறிப்பிடத் தக்கது.