தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.

சென்னை, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுத்து கொடுப்பது தொடர்பான விஷயங்கள் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. த.வெ.க-வின் சிறப்பு ஆலோசகராக செயல்பட பிரசாந்த் கிஷோர் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. அதேநேரம் பொதுச்செயலாளர் ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal