சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்திய போது, கிடைத்த ஆவணங்களில் அடிப்படையில் தொழில் அதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தில் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.912 கோடி முடக்கப்பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரம் காவல்நிலைய எல்லையில், சேமியர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரது தந்தை தொழில் அதிபர், போரூரில் மிகப்பெரிய மருத்துவ பல்கலையை உருவாக்கி உள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்கேஎம் பவர்ஜென் தனியார் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஆண்டாள்,அவரது தந்தை மற்றும் சிலருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சேவைகள், அசையா சொத்துக்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.912 கோடி மதிப்பிலான பிக்சட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் பண்டு தொடர்பான முதலீடுகளும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது’’இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal