ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (ஜனவரி 17) நிறைவு பெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. தேசிய கட்சியான பா.ஜ.,வும் போட்டியில்லை என்று விலகிக் கொண்டுள்ளது.

தேர்தல் களத்தில் தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே களத்தில் உள்ளது. தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல, நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்கள் உட்பட மொத்தம் 56 பேருடைய மனுக்கள் கடைசி நாளான இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று (ஜனவரி17) மதியம் 3 மணியுடன் வேட்பு மனுவுக்கான நேரம் முடிந்து விட்டதால் மனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நாளை (ஜனவரி18) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ல் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள கடைசி நாளாகும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal