‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பெண்கள் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் வழிகாட்டுதல்படி பெண்கள் பாலியல்தொல்லைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகள் மற்றும் தற்காப்புக்கான பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் இணைச் செயளாலர் மதுரை டாக்டர் பா. சரவணன் வழங்கினார்.
பெண்கள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகள் மற்றும் தற்காப்புக்கான பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை கழக மருத்துவரணி சார்பில் வழங்கும் நிகழ்ச்சி மதுரை நரிமேடு அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு தற்காப்புக்கான ஸ்பிரே மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா.சரவணன் பேசியதாவது:
‘‘ஒவ்வொரு ஆண்கள் வெற்றிக்கு பின்னால் பெண்கள் உள்ளார்கள் என்று பழமொழி உள்ளது. குறிப்பாக இந்திய அளவில் பெண்கள் பல்வேறு சாதனை படைத்து பெண் இனத்துக்கு பெருமை தேடி தந்தார்கள். வீரமங்கை வேலு நாச்சியார், ஜான்சிராணி, அன்னை தெரசா அதே வரிசையில் புரட்சித்தலைவி அம்மா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
குறிப்பாக புரட்சிதலைவி அம்மா பெண்கள் சமுதாயம் வளர்ச்சி அடைய மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோ படைகள், முதன்முதலாக மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்,மின்விசிறி திட்டம்,அதனைத் தொடர்ந்து ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புற பெண்கள் மேன்மை அடைய கறவை மாடுகள் ஆடுகள் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடியார் முதலமைச்சரான பிறகு அம்மாவின் கனவு திட்டத்தை நனவாக்கும் வகையில் தொடர்ந்து தாலிக்கு தங்கத் திட்டத்தை வழங்கினார், அதேபோல உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகன திட்டத்தை தொடங்கி வைத்து மூன்று லட்சம் பெண்களுக்கு வழங்கினார், உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சகவீத இட ஒதுக்கீட்டை அம்மா கொண்டு வந்ததை எடப்பாடியார் அதை செயல்படுத்தினார்.
அதே போல சட்ட ஒழுங்கை எடுத்துக் கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறப்பாக இருந்தது, பெண்களுக்கு பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் இருந்தது ஆனால் தற்போது 44 மாத ஸ்டாலின் திமுக ஆட்சியில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15 சகவீதம் அதிகரித்து விட்டது.பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது,இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, கனிமொழி தமிழகத்தில் மதுவினால் அதிக அளவில் இளம் விதவைகள் அதிகரித்து விட்டன என்று ஒரு தவறான கருத்தை சொன்னார், ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் ஆண்டுக்கு 50,000 கோடி இலக்காக வைத்து மது விற்பனை அதிகமாக நடைபெறுகிறது இதனால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர் இன்றைக்கு 10 சதவீதம் விதவைகள் அதிகரித்து விட்டனர்
மேலும் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்திருந்தனர், அதைக் கூட அணிந்து வரக்கூடாது என்று ஒரு புதுமையான சட்டத்தை ஸ்டாலின் அரசு கடைப்பிடிக்கிறது. தொடர்ந்து சட்டமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்கள் குறித்து கழகப் பொதுச் எடப்பாடியார் தோலுரித்துக் காட்டினார், ஆனால் அதை திசை திருப்பும் வகையில், திமுக அமைச்சர்கள் இதற்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று பொறுப்பற்ற முறையில் கூறி வருகின்றனர்.
புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் காலங்களில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து போலீஸ்க்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது, தவறு நடந்தால் அதை 10 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் அளவில்,ஆற்றல் மிகுந்த காவல்துறை இருந்தது ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை கைகள் கட்டப்பட்டு விட்டன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகப்பட்ட மாணவி, குற்றவாளி செல்போனில் சார் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக கூறினார்,இது தொடர்பாக எடப்பாடியார்,யார் அந்த சார் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் இதுவரைக்கும் அந்த குற்றவாளி யார் ? என்று கண்டுபிடிக்க முடியாத காவல்துறையாக ஸ்டாலின்திமுக அரசு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கழக பொது செயளாலர் எடப்பாடியார் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் ஸ்டாலின் திமுக ஆட்சியில், பெண்களுக்கு , குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று அவல நிலை உருவாகியுள்ளது ,பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான பெப்பர் ஸ்பிரே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கழக மருத்துவரணி சார்பில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கப்படுகிறது ,இதனைத் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளும் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இனி இந்த ஸ்டாலின் திமுக ஆட்சி நம்மை காப்பாற்றாது, ஆகையால் நமக்கு நாமே நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மக்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள், இந்த நிலை இன்னும் 16 மாதம் தான் ஏன் என்றால் 2026 ஆண்டில் எடப்பாடியார் ஆட்சி வந்துவிடும் அப்போது பெண்கள் பாதுகாப்பு ஆட்சியாக இருக்கும்’’ என பேசினார்.
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு டாக்டர் சரவணன் புதுவித ஆபரேஷனை தொடங்கியிருக்கிறார்.