பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் 25ம் தேதி கூடுவதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், பார்லிமென்ட்டின் இரு அவைகளும் நவம்பர் 25ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், பார்லி., வளாகத்தில் வரும் நவம்பர் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்க உள்ளது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
நவம்பர் 24ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பார்லி, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.