அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த, அரசு ஊழியர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளது. அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை செய்த பணப்பரிமாற்ற வழக்கை, தெலுங்கானா ஐகோர்ட் ரத்து செய்தது.

இதனை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில், அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு, இன்று (நவம்பர் 06) நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி.மாசி அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

  • குற்றவியல் நடைமுறை சட்டம் 171ன் படி, முன் அனுமதி பெறுவது அவசியம்.
  • அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முன் அனுமதி பெற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து, மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal