‘‘விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை’’ என பா.ஜ.க, மூத்த தலைவரும், முன்னாள் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை தெரிவித்தார்.
சென்னையில், நிருபர்கள் சந்திப்பில், தமிழிசை கூறியதாவது: ‘‘இன்னைக்கு உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை.
ஆனால் உலக அரங்கில், விளையாட்டை முன்னிறுத்துவதற்கு அஜித்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, இங்கே சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டு திடல்களில் 10 பேர் பயிற்சி பெற்றால், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200 கட்ட வேண்டும் என மிக கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது.
இது சாமானிய மக்கள் பயன்பெறும் விளையாட்டு திடல்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மாநகராட்சி திடலுக்கு கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மாநகராட்சி உடனே திரும்ப பெற வேண்டும். போதையில் இருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு விளையாட்டு தேவை’’ இவ்வாறு அவர் கூறினார்.