அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பேரணியை தொடங்கி வைத்தார்.

தளவாய் சுந்தரம் பா.ஜ.க,வினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகளை பறித்து இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal