தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு நேற்று கால்கோள் விழா நடந்தது. அன்றைய தினம் நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கும் புஜை நடந்தது.
இந்த நிலையில்தான், கரூர் அருகே ஆசிரியையின் சொத்து ஆவணத்தை வாங்கி மோசடி செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியைக்கு தெரியாமல் ஆவணங்களை வைத்து லோனில் கார் வாங்கிய தவெக நிர்வாகி; ஆசிரியை புகாரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.