காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது பிரிந்திருக்கிறார்கள். இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்ந்துவந்தாலும் முறைபடி விவாகரத்து எதுவும் பெறவில்லை. எனவே அவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அடுத்த வருடம் கண்டிப்பாக நல்ல செய்தி வரும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
காதல்கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டினார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. அப்போது அவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு நீண்ட யோசனைக்கு பிறகு ரஜினி வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது காதலுக்கும், அன்யோன்யத்துக்கும் சாட்சியாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாகவே போய்க்கொண்டிருந்தது. ஐஸ்வர்யாவை தனுஷ் 3 படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கினார். அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அதேபோல் அவரது இரண்டாவது படமான வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார் தனுஷ். அதேபோல் தனுஷின் நடை, உடை, பாவனைகள் என அனைத்தும் மாறுவதற்கு ஐஸ்வர்யா பக்கபலமாக இருந்தார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றார்கள்.
சூழல் இப்படி இருக்க நாங்கள் இரண்டு பேரும் தனித்தனி வழிகளில் பயணப்படப்போகிறோம் என்று சில வருடங்களுக்கு முன்பு சொல்லி தங்களது பிரிவை அறிவித்தார்கள். அவர்களது பிரிவுக்கு யூகங்களாக பல காரணங்களை பலரும் சொன்னார்கள். ஆனால் பிரிவு என்பது அவர்களது தனிப்பட்ட முடிவு என்பதால் அதில் ஓரளவுதான் தலையிட வேண்டும். இதற்கிடையே இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக இரண்டு பேரும் சேர வேண்டும் என்ற அக்கறை பேச்சுக்களும் எழுந்தன.
இரண்டு பேரும் இப்போது பிரிந்து வாழ்ந்துவந்தாலும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. மேலும் தனுஷையும், ஐஸ்வர்யாவையும் மீண்டும் சேர்த்துவிட வேண்டுமென்று இரண்டு குடும்பத்தினரும் முயன்றுவருகிறார்களாம். குறிப்பாக அவர்கள் இரண்டு பேரும் மகன்களுக்காக சேர்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று ரஜினி முழு மூச்சாக நினைக்கிறார். இதன் காரணமாக அவரும் நேரடியாகவே இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்; ஆரம்பத்தில் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போது இரண்டு பேரின் மனதிலுமே சில மாற்றங்கள் வந்திருக்கிறதாம். அதன் வெளிப்பாடுதான் இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா பதிவிடும் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக்கிடுவது என்கிறார்கள். அதுமட்டுமின்றி ரஜினி சினிமாவுக்கு வந்து அடுத்த வருடத்துடன் 50ஆவது வருடம் நிறைவடைகிறது. எனவே அதற்கு ஒரு நிகழ்ச்சி எடுக்கப்போகிறார்கள் அதுதான் இருவரும் மீண்டும் இணைவதற்கான முதற்புள்ளியாக இருக்கும் என்று திரைத்துறையில் பலமாகவே பேசுகிறார்கள்.
இந்நிலையில் இருவர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கோல்டன் ஸ்பேரோ பாடலில் சில வரிகளை எழுதிய தனுஷின் மூத்த மகன் யாத்ரா விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறாராம். அந்தப் படத்தை தனுஷே இயக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்ட வேலைகளில் தனுஷ் இருக்கிறாராம். சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் பூஜைக்கு ரஜினி, ஐஸ்வர்யா எல்லோரும் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும்; அப்போதிருந்தே இரண்டு பேரையும் சேர்த்து வைப்பதற்கு யாத்ரா முடிவு செய்திருப்பதாகவும் புதிய தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. எது எப்படியோ அவர்கள் இருவரும் இணைந்தால் மகிழ்ச்சிதானே.