வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சீமான் கைது செய்யப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் அமெரிக்காவில் இருந்தாலும், தமிழக அமைச்சர்களின் நகர்வுகளை துல்லியமாக கண்காணித்து வருகிறாராம்.

முதல்வர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் சீமானுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை முதல்வர் ‘மூன்றாவது’ (!) கண்ணில் பார்த்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது,

‘‘சார், விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதூறுப் பேசினார் சீமான். இதையடுத்து சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, அறிக்கை வழங்க எஸ்.டி, எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சீமான் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து ஆலோசனை செய்து இருக்கிறாராம். அமெரிக்கா சென்றாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பேன். என் முழு கவனமும் தமிழத்தில்தான் இருக்கும். அதேபோல, உங்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்காணி த்தபடி இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்; கவனமாக இருங்கள் என்றெல்லாம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை எச்சரித்தார் ஸ்டாலின்.

இதுகுறித்து மாநில உளவுத்துறைக்கும் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், தமிழகத்தில் நடக்கும் அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் உள்ள முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது உளவுத்துறை. உயரதிகாரிகளிடம் நேற்று பேசிய முதல்வர் தரப்பு, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார்கள் ? என்ன செய்கிறார்கள் ? என விசாரித்துள்ளது.

அமைச்சர்களின் தினசரி செயல்பாடுகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனை பற்றி ஸ்பெஷலாக கேட்டிருக்கிறது மேலிடம். அப்போது, முதல்வரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த கையோடு காட்பாடி சென்றவர் அங்குதான் இருக்கிறார். இப்போது வரை சென்னைக்கு வரவில்லை. அநேகமாக சனிக்கிழமைதான் சென்னைக்கு வருவார் என விபரங்களைத் தந்துள்ளனர்.

அதேபோல, சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை கைது செய்வதா? தவிர்ப்பதா? என்று முதல்வர் தரப்பிடம் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். சீமான் மீது பதியப்பட வேண்டிய வழக்குகள் பற்றி விசாரணை செய்துள்ளனர். அதோடு இல்லாமல். உதயநிதி ஸ்டாலினிடம் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றியும் ஸ்டாலின் பேசி உள்ளார். கேபினெட் கூட்டத்தில் எச்சரிக்கை செய்தது போல, அமைச்சர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார் ஸ்டாலின் என்பதே திமுகவில் பேசப்படும் சீக்ரெட் டாபிக்.

முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஸ்டாலின் திரும்பி வந்த பின் அமைச்சரவை மாற்றம் இருக்கும். இதனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில். இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது. ஆனாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பார் . நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார்.. இந்த பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார்’’ என்றனர்.

ஏற்கனவே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும், சீமானுக்கும் பிரச்னை முற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சீமான் மீது கைது படலம் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal