கடந்த இரண்டு மாதமாக சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் பற்றிய செய்திதான். தனுஷ் அரியவகை நோயான தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரால் இல்ல வாழ்க்கையில் ஈடுபட முடியாது, அவர் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததே சாதனை என்றேல்லாம் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், மயோபதி மருத்துவர் இதற்கு விளக்கம் கொடுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக மாறியவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில், தனுஷூக்கு 4வயது இருக்கும் போதே அவர் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டதால், அவரால் நடக்க முடியாமல் போனது. அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
தற்போது நெப்போலியன்- மகன் தனுஷ்க்கு திருமணம் செய்யய ஏற்பாடு செய்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த நெப்போலியனின் சொந்தக்கார பெண்ணான அக்ஷயாவை பேசி முடித்துள்ளார். இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை கோலாகலமாக நடத்த ஆசைப்பட்ட நெப்போலியன், திருமணத்தை ஜப்பானில் நடத்த உள்ளார். இதற்கான பத்திரிக்கை வைக்கும் வேலையில் நெப்போலியன் மும்முரமாக செய்து வருகிறார்.
இப்படி திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க, நெப்போலியனின் மகனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது, அவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், பணத்தை கட்டி ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் வீணாக்குவதாகவும், அந்த பெண்ணால் நர்சாகத்தான் இருக்க முடியும், மனைவியாக இருக்க முடியாது என்றெல்லாம் பல செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள, நெப்போலியன் கட்டியுள்ள மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல், நெப்போலியன் மகனுக்கு திருமணம் செய்ய இருப்பது குறித்து மருத்துவரின் உரிய ஆலோசனை செய்தார். அதன் பின் தான் தனுஷுக்கு பெண் பார்க்கப்பட்டது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்ய முடியாது, இல்லறை ஈடுபட முடியாது என்பது உண்மை அல்ல. சிலர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷூக்கு சிறு வயதிலேயே இந்த நோய் கண்டு பிடிக்கப்பட்டால், அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை காலத்தை பொறுத்தே இந்த நோயின் தன்மை இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் திருமண ஏற்பாடு நடந்தது, தனுஷும் அக்ஷயாவும் ஒருவரை ஒருவர் போனில் பரஸ்பரமாக பேசித்தான் இந்த திருமண முடிவை எடுத்தார்கள், அந்த பெண்ணுக்கு இந்த நோய் குறித்தும், தனுஷ் குறித்தும் முழுமையாக தெரியும் என்று மயோபதி மருத்துவர் டானியல் கூறியுள்ளார்.