இடைக்கால ஜாமினை மேலும் 7 நாள் நீட்டிக்க கோரிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கமான ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடும் படி அறிவுறுத்தி உள்ளது.

மதுபான முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் அவர் முறையிட்டதைத் தொடர்ந்து ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், உச்நீதிமன்றத்திங் தாக்கல் செய்த மனுவில், ‘‘சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் 7 கிலோ எடை குறைந்துவிட்டதாகவும், மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் எடுக்க வேண்டி உள்ளதால், ஜூன் 7 வரை ஜாமின் நீட்டிக்க வேண்டும்’’ எனக்கூறியிருந்தார்.

இதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க முடியாது. தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று ( மே 29) கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கமான ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal