டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்.வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுபான முறைகேட்டு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார் . இது தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் செயல் என்றும், பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டு இடைக்கால ஜாமின் பெற்றார். தேர்தல் முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி, மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஜூன் 4 ம்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. ஜூன் 7 வரை ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். ‘ சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் 7 கிலோ எடை குறைந்து விட்டதாகவும், மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும், உடல் நலத்தை காரணம் காட்டி’ ஜாமின் நீட்டிப்பு கேட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க முடியாது எனக் கூறி ஜாமீன் நீட்டிக்கக் கோரிய மனுவை சிறப்பு நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

மேலும், தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என விசாரித்த நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். இதனால் ஜூன் 1ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal