2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. தலைமை தயாராகி வரும் நிலையில், திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்தநாளையொட்டி உ.பி.க்களுக்கு உற்சாக விருந்தைக் கொடுத்து துறையூர் தொகுதியில் தி.மு.க. ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ய பிறந்தநாளன்று பணியினை தொடங்கியிருக்கிறார்.

இதுபற்றி உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள நடுநிலையான உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளராக அர.ந.அசோகனை நியமித்தபிறகு அனைத்து சமுதாயத்தினரையும் அரவனைத்துச் செல்கிறார். இவர் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அங்கு பெரும்பான்யை£க வசிக்கும் முத்தரையர் சமுதாயம் உள்பட அனைத்து சமுதாயத்தினரையும் அரவனைத்துச் செல்கிறார்.

இவரது தந்தை அர.நடராஜன் தி.மு.க.வின் மூத்த முன்னோடியாக திகழ்ந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் திருச்சி புறநகரில் தி.மு.க.வை வளர்த்தெடுத்தவர். தி.மு.க. தலைவர் கலைஞரே, ‘உப்பிலியபுரத்தை உப்பில்லாத ஊர்’ என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு உப்பிலியபுரம் தி.மு.க.வின் கோட்டையாக மாறியதற்கு இவரது பங்களிப்புதான் முக்கியக் காரணம்.

கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன், கனிமவளக் கொள்ளை, ஓடைகளை ரோடுகளாக்கி கமிஷன் பார்ப்பது என இருக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கு மத்தியில், கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தாமல், கட்சிக்கு விசுவாசமாக உழைக்கக் கூடியவர்தான் ந.அசோகன். இவரது பிறந்தநாளான இன்று (மே27) பச்சபெருமாள் பட்டி அருணா ரைஸ்மில்லில் உடன் பிறப்புக்களுக்கு உற்சாக விருந்தை வைத்து அசத்தியிருக்கிறார்.

மேலும், இவரது பிறந்தநாளையொட்டி மலைக்கோட்டை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் அசோகன். இவரைப் போல மற்ற ஒன்றியச் செயலாளர்களும் செயல்பட்டால், மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. ஏனென்றால், ஒரு கட்சியின் ஆணிவேரே ஒன்றியச் செயலாளர்கள்தான். அப்படிப்பட்ட சில ஒன்றியச் செயலாளர்கள் கமிஷனுக்கும், கலெக்ஷனுக்கும் ஆசைப்படுவதால்தான் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal