மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜு ஜனதா தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு நடந்த பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி தொலைந்து போய்விட்டதாகவும், அது தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும் விமர்சித்தார்.

தற்போது ஒடிசாவில் ஆட்சியிலும் ஆளும் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழரும் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளருமான வி.கே.பாண்டியனையே அவர் இவ்வாறு மறைமுகமாக விமர்சித்தார். அதேபோல ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா என்று அமித்ஷாவும் விமர்சித்திருந்தார். இதனிடையே பிரதமர் மோடியின் பேச்சு தமிழர்களை திருடர்களைப் போல சித்தரிப்பதாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பூரி ஜெகந்நாதர் கோயிலில் சாவி தொலைந்து போனதா என்றெல்லாம் தெரியாது. ஆனால், சாவியை எடுத்துச் சென்று தமிழ்நாட்டில் ஒளித்துவைத்துவிட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். உயர் பதவியில் இருக்கும் பிரதமர், இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழக மக்கள் பற்றி, தமிழைப் பற்றி கொச்சையாக பேசுவது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

குஜராத் மாநிலத்தில் பிறந்த பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் சென்று போட்டியிடுகிறார் என்று சுட்டிக்காட்டிய அப்பாவு, “தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒடிசாவில் தேர்தலில் போட்டியிட்டால் என்ன தவறு? அதில் எந்தத் தவறும் இல்லை. அதே போல உத்தர பிரதேசத்தில் சென்று தமிழக மக்கள் உங்களுக்கு விரோதமாக இருக்கிறார்கள் என்று பேசுகிறார்கள். இதெல்லாம் நியாயமா? பிரதமர் உண்மையை பேச வேண்டும். இந்தியாவின் ஒற்றுமைக்காக பேச வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “இந்தியா கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதால் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் கோபம் காட்டுகிறார். இந்தியா கூட்டணி வளர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைக்கும் சூழல் வந்துவிட்டதால் கொடுரமான வார்த்தைகளை பிரதமர் பயன்படுத்துகிறார்: என்றும் குற்றம்சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal