கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் மாமியாருடன் கள்ள உறவு வைத்து குடும்பம் நடத்திய மருமகன், மாமியாரையே திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், தமிழகத்தில் வேலூரிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகாரில் சில நாட்களுக்கு முன்பு திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.. பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே உள்ளது சத்ராபால் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சிக்கந்தர்… இவருக்கு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் கல்யாணம் ஆனது.
இதனிடையே, சிக்கந்தரின் மனைவி திடீரென இறந்துவிட்டார்.. ஆனாலும், மாமியார் வீட்டிலேயே சிக்கந்தர் தங்கியிருந்தார்.. அந்த நேரத்தில், மாமியாருடன் சிக்கந்தருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. இது நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறிவிட்டது.. 2 பேருமே அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.. இவர்களின் நடத்தையில், சிக்கந்தரின் மாமனாருக்கும், மற்ற உறவினர்களுக்கும் சந்தேகம் எழுந்தது.. அதனால், மாமியார், மருமகனிடம் இதுகுறித்து விசாரித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், தங்களுக்குள இருக்கும் கள்ளக்காதலை, பகிரங்கமாக 2 பேரும் ஒப்புக் கொண்டார்கள். உடனே, சொந்தக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து ஊர் பஞ்சாயத்தை கூட்டினார்கள.
அதன்படி, மாமியார், மருமகன் இருவருமே தவறை ஒப்புக் கொண்டதாலும், இருவருக்குமே உறவு இருப்பதாலும், ஊர் பெரியவர்களே இவர்களுக்கு கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.. கிராமத்தினர் முன்னிலையில், மருமகன், மாமியாருக்கு தாலி கட்டினார்.. இதில் ஹைலைட் என்னவென்றால், ஊர்க்காரர்கள் தங்களை ஒன்றுசேராமல் பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, மாமியாரும், மருமகனும், ஏற்கனவே நீதிமன்றத்திலும் கல்யாணம் செய்துகொண்டார்களாம்.
ஊர்பஞ்சாயத்தில் நடந்த இந்த கல்யாண வீடியோதான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.. இந்த சலசலப்பு அடங்குவதற்குள்ளேயே இன்னொரு சம்பவம் நம்ம வேலூரிலும் நடந்துள்ளது..
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்திருக்கிறார்.. அந்த மனுவில், ‘‘எனக்கு திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். என்னுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். இந்த நிலையில் மருமகன் எனது மகளை வீட்டில் விட்டு விட்டு, என்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர் என்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
எனது மனைவியை என்னுடன் சேர்ந்து வாழ அழைத்தால் அவர் என்னுடன் வர மறுக்கிறார். என் மனைவியை வீட்டுக்கு அனுப்புமாறு மருமகனிடம் கூறினால் அவரும் என்னிடம் அனுப்ப மறுக்கிறார். எனது மனைவியை கேட்டால், எனது கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதற்கு மருமகனின் பெற்றோரும் உடந்தையாக இருக்கிறார்கள். எனவே, மருமகனிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும்’’ என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.