த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
எனவே தமிழக அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை முக்கிய கவனத்தில் கொண்டு கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.