டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5,406 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த 12டி படிவத்தை தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களுக்கான வாக்குப் பதிவை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார். வரும் 24-ம் தேதி வரை இவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க முடியும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் புதுடெல்லி தொகுதியிலில் நேற்று முன்தினம் தங்கள் வீட்டிலிருந்தே வாக்களித்தனர்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் முகமது ஹமீத் அன்சாரி கடந்த 16-ம் தேதி வாக்களித்தார். முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி நேற்று வாக்காளித்தார்.

முதல் நாளில் 1482 பேர் வீட்டிலிருந்து வாக்காளித்தனர். 2-ம் நாளில் 1409 பேர் வாக்களித்தனர். மேற்கு டெல்லி தொகுதியில் அதிகபட்சமாக 348 வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal