பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தலம் மூலம் ஆந்திராவில் நடைபெறும் தேர்தலையொட்டி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ஆந்திர பிரதேச மக்கள் குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். இந்த சாதனை நமது ஜனநாயக உணர்வை மேலும் மேம்படுத்தட்டும் என கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal