நடிகர் விஷ்ணுகாந்த்தை திருமணம் செய்து கொண்டு, ஒரே மாதத்தில் அவரிடம் இருந்து பிரிந்த நடிகை சம்யுக்தாவிடம், திரைப்படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘முத்தழகு’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சம்யுக்தா. ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை கடந்த ஆண்டு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி, விஷ்ணுகாந்திடம் இருந்து பிரிந்து சென்ற சம்யுக்தா, பல நாட்கள் ஆகியும் வராமல் இருந்ததோடு விவாகரத்து கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதை தொடர்ந்து, விவாகரத்து பற்றி விஷ்ணுகாந்த் முதலில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுக்க, இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறியது.
விஷ்ணுகாந்த் கூறிய புகாருக்கு, லைவில் வந்து சம்யுக்தா விளக்கம் கொடுத்ததோடு… பெற்றோருடன் சேர்ந்து பேட்டி ஒன்றையும் கொடுத்தார். அதில் விஷ்ணுகாந்த் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை பல வழிகளில் கொடுமை படுத்தியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர்களின் விவாகரத்து குறித்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றுவிட்ட நிலையில், இருவரும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் சம்யுக்தா தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தபோது, அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த அவர், சீரியல்களில் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து இதுவரை யாரும் கேட்டது இல்லை. ஆனால் எனக்கு 3 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இரண்டு படங்களில் நேரடியாக அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியபோது, என்னால் முடியாது என கூறிவிட்டேன்.
இதை தொடர்ந்து ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வந்த போனை என் அம்மா தான் அப்போது பேசினார். அவரிடம் சம்பளம் உள்ளிட்ட அனைத்து தகவலும் கூறிய பின்னர், அவர் ஆடிஷனுக்கு எங்கு வரவேண்டும் என கேள்வி எழுப்பிய போது… ஆடிஷனுக்கு வரத்தேவையில்லை. அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் போதும் என பேசியுள்ளனர். முதலில் என் அம்மாவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என கூறும் போது புரியவில்லை . பின்னர் தான் அவர் சொன்ன விஷயம் விளங்கியது. அவரே இந்த படத்தில் என் மகள் நடிக்க மாட்டார் என கூறி போனை வைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.