‘ஏய் உண்ணை நம்பித்தானே வந்தேன்… உன் நண்பர்களுடன்… ப்ளீஸ் என்னை விட்டுவிடு…’ என இளம் பெண் ஒருவர் பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரத்தின் போது கதறியது இன்னும் நாம் மறவாத நிலையில், வலைதளங்கள் மூலம் இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தொலைப்பது தொடர் கதையாகிவருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பி மிரட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு.. 20 வயதாகிறது.. இவர் எந்நேரமும் சோஷியல் மீடியாவிலேயே இருப்பவராம்.. அந்தவகையில், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார்.

அப்போது 19 வயது பெண் ஒருவர், சந்துருவிடம் அறிமுகமாகியிருக்கிறார்.. நாளடைவில் இருவருமே நட்புரீதியாக பேசத்துவங்கினர்.. ஒருவருக்கொருவர் செல்போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டு, இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.. ஒருமுறை, அந்த பெண்ணுக்கு போன் செய்த சந்துரு, தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.. இந்த இளம்பெண்ணும், நண்பரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் ஆர்வத்தில், சந்துருவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. அப்போதுதான் தெரிந்தது அந்த வீட்டில் ஏற்கனவே சந்துருவின் நண்பர்கள் தனுஷ் (20), சக்தி (20) ஆகிய 2 பேர் இருந்திருக்கிறார்கள்.. ஆக மொத்தம் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்க்கிறார்கள். இந்த கொடுமையை, அந்த பெண்ணிற்கு தெரியாமல் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு பிறகு, இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் அந்த பெண் சொல்லாமல் இருந்துவிட்டார்.. சமீபத்தில் அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது.. நண்பர்கள் 3 பேரும் பலாத்காரம் செய்த வீடியோவை, மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துவிட்டார்களாம்.. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை, கல்யாணதையே நிறுத்திவிடடார்.. அப்போதும், அந்த நண்பர்கள் 3 பேரும் அடங்கவில்லை.. மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு வரவேண்டும் என்றும், பணம் கேட்டும் அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

எல்லாவகையிலும் தன் வாழ்க்கையை பாதிக்கப்பட்டதை உணர்ந்த அந்த பெண், இதற்கு மேலும் 3 பேரையும் விட்டால், மற்ற பெண்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று நினைத்து, திருவாடானை மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்துரு, தனுஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஆனால், சக்தி என்பவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா..!!!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal