கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வந்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்டமாக மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் அதிமுக செயலாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

18வது மக்களவைக்கான 543 எம்பிக்களை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கும் நிலையில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. நாளை மறுநாள் மூன்றாம் கட்ட தேர்தல் ஆனது நடக்க இருக்கிறது ஜூன் ஒன்றாம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நிறைவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கின்றன. நாடு முழுவதும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் நிறைவடைந்த மாநிலங்களில் போது சந்தித்த பிரச்சனைகள் எதிர்கொண்ட சிக்கல்களை தீர்ப்பது குறித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவில் தலைமையால் கொடுக்கப்பட்ட பணம் செலவு செய்யப்படாமல் ஒரு சிலரால் சுருட்டி கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் கேட்டு கட்சி தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதில் தேர்தலின் போது நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் சென்னையை பொருத்தவரை அதிமுகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இல்லை என அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் பாத வலி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி கேரளாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்து ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது சேலம் திரும்பி இருக்கும் அவர் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருக்கிறார். அந்த வகையில் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களையும் அடுத்தடுத்து அழைத்து ஆலோசனை நடைபெற இருக்கிறது.

மேற்கண்ட மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களை செயலாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும், ஒரு சிலர் மிகவும் மந்தமாக தேர்தல் பணி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது மேலும் பூர்த்தி ஏஜெண்டுகளுக்கு உரிய பணம் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும் இப்படி பழனிச்சாமி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேர்தலுக்கு பிறகு அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் இருக்கும் நிலையில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு எடப்பாடி பழனிச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்திருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. கட்சியினர் விசுவாசமாக இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அதிர்த்தி தெரிவித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வரும் கூட்டங்களிலும் இதுபோன்ற சிறப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal