குஜராத் மாநிலம் சூரத் லோக்சபாவில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளரை முன்மொழிந்து போடப்பட்ட கையெழுத்து போலி எனக் கூறி வேட்புமனுவை நிராகரித்திருந்தனர். இதே காரணத்தைக் கூறி அங்கு வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அங்கு பாஜக வேட்பாளர் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் காங்கிரஸ் சார்பில் அக்ஷய் பாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அங்கே வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அக்ஷய் பாம் திடீரென பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அங்கு இன்றுடன் வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் முடிகிறது.

இந்த கால அவகாசம் முடிய சில மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதற்காக அவர் பாஜக எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலா சென்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதன் மூலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர் எளிதாக எம்பியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தூர் தொகுதியில் இப்போது பாஜகவில் இருந்து ஷங்கர் லால்வானி எம்பியாக இருக்கிறார். அவருக்கு எதிராகத் தான் அக்ஷய் பாம் என்பவரைக் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருந்தது.. இந்தூர் லோக்சபா தொகுதிக்கு மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இப்போது அக்ஷய் பாம் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்படியொரு நபருக்கு சீட் கொடுத்தது காங்கிரஸ் தலைமையின் தவறு என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் காங்கிரஸின் தேவேந்திர சிங் கூறுகையில், “நான் கட்சி தலைமைக்கு ஏற்கனவே அக்‌ஷய் பாம் பற்றி எச்சரித்திருந்தேன்.

அவர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை.. இப்போது நான் சொன்னது தான் நடந்துள்ளது.. எங்களைப் போன்ற கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு சீட் வழங்காமல் அக்ஷய் போன்ற நபர்களுக்கு சீட் வழங்குவது ஏன் என புரியவில்லை” என்று சாடினார்..

அவர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை.. இப்போது நான் சொன்னது தான் நடந்துள்ளது.. எங்களைப் போன்ற கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு சீட் வழங்காமல் அக்ஷய் போன்ற நபர்களுக்கு சீட் வழங்குவது ஏன் என புரியவில்லை” என்று சாடினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal