கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவும் நிலையில் தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கே பிறகே அனுமதிக்கப்படுகிறது.
பறவைக் காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக கால்நடைத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கோழி, வாத்துகள், முட்டை, கோழி தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்களை ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.