இந்திய அளவில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடைபெறவிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர். 

அதேபோல ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடிகளில் பதட்டமான சூழல் நிலவியதும் குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மக்கள் தேர்தலை புறக்கணித்த செய்திகளையும் நாம் கேட்டறிந்தோம். தமிழகத்தை பொறுத்தவரை காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

சில இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு மாலை 6 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை புதுச்சேரி அல்லாமல் மீதமிருக்கும் 39 தொகுதிகளில் 72.09% வாக்குகள் சராசரியாக பதிவாகியுள்ளது. இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகால தேர்தல்களை ஒப்பிடும்பொழுது இது குறைந்த அளவிலான வாக்குப்பதிவு என்கின்ற ஒரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களை சேர்த்து 40 தொகுதிகளில் 73.02% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இதுவரை நடந்த தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்த தேர்தலாக சுமார் 73.74% வாக்குகள் பதிவானது. 

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை பொருத்தவரை தமிழக மற்றும் புதுவையில் சுமார் 72.47 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை 72.09 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal