அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா என்று சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறி இழுத்தடிப்பதா? சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக சிபிஐ அடுத்த விசாரணையின்போது பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை அதிமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தமிழ்நாட்டில் விற்றதாக சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal