‘‘அண்ணாமலை சகுனி மட்டுமல்ல அரசியல் ரீதியாக நல்ல எண்ணம் இல்லாதவர்’’ என ராஜன் செல்லப்பா கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார்!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் இறுதி கட்ட பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் போட்டியிடுகிறார், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி, தனக்கன்குளம் கைத்தறி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில், விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய விஐயபிரபாகர், ‘‘ஜாதி, மதம், இனம் இல்லாதது தான் அதிமுக-தேமுதிக கூட்டணி. கேப்டனின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் உங்கள் அனைவருக்கும் தெரியும். என் தம்பி சண்முக பாண்டியனுக்கு சவுக்கத் அலி என்று தான் எனது தந்தை முதலில் பெயர் வைத்தார்.

இதற்கு இப்ராஹிம் ராவுத்தர் வேண்டாம் இந்து பெயரை வைக்க வேண்டும் என்று சொன்னதால்தான் சண்முக பாண்டியன் என்று பின்னர் பெயர் வைத்தார். என் தந்தையை இல்லாத இடத்தில் அந்த ஸ்தானத்தில் நான் உங்களை வைத்து பார்க்கிறேன்’’ என கூறினார்.

தொடர்ந்து பேசிய ராஜன் செல்லப்பா, ‘‘தற்போதைய அரசு மின்சார கட்டணம், பால் விலை என அனைத்தையும் உயர்த்தி விட்டனர். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நான் செய்வதை போல நாடாளுமன்ற உறுப்பினர் இந்த பகுதிக்காக செய்வார்.

மத்திய அரசின் தலைவராக இருக்கிறவர் சகுனி வேலை பார்ப்பேன், அதிமுகவை வேறொருவருரிடம் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அண்ணாமலை சகுனி மட்டுமல்ல அரசியல் ரீதியாக நல்ல எண்ணம் இல்லாதவர் என விமர்சித்தார். விஜய பிரபாகர் பெயரைச் சொன்னால் மக்களாகிய நீங்கள் கைதட்டுகிறீர்கள், பாஜக மூத்த தலைவர்களுக்காக அண்ணாமலை கைதட்ட சொன்னால் எருது தட்டுகிறார்’’ என ராஜன் செல்லப்பா விமர்சித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal