திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13ந்தேதி) சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம், வேலூர் கிராமத்தில் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள திருப்பூர் வருகை தர உள்ளார்.

எனவே முதலமைச்சரின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 13-ந்தேதி எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal