‘‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. இருக்காது’ என்ற தொணியில் பேசினார் அண்ணாமலை. அதற்கு ‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், எங்கள் அம்மாவையும், அண்ணாவையும் இகழ்ந்து பேசுவதும், தேவை எனும்போது புகழ்ந்து பேசுகிற நாடகம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது’’ என ராஜ் சத்யன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில் அதிமுக -& பாஜக இடையே வார்த்தை மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘‘இந்நிலையில், அதிமுக என்னும் பெருங்கழகத்தை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் அண்ணாமலை சுற்றி திரிந்தது எங்களுக்கு தெரியும்’’ என ராஜ் சத்யன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ‘‘கூட்டணியில் இருந்தபோதே அஇஅதிமுக என்னும் பெருங்கழகத்தை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் நீங்கள் சுற்றி திரிந்தது எங்களுக்கு தெரியும். மக்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் தோல்வி பயத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டி உள்ளீர்கள். திமுக இருந்தால் கூட பரவாயில்லை- அஇஅதிமுக அழியவேண்டும் என்று பொருள் பட பேசுகிறீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், எங்கள் அம்மாவையும், அண்ணாவையும் இகழ்ந்து பேசுவதும், தேவை எனும்போது புகழ்ந்து பேசுகிற நாடகம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது நன்றி.

இது தான் எங்களுக்கான திuமீறீ. அண்ணன் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் மாண்புமிகு அம்மா அவர்களின் பெருங்கனவை நெஞ்சில் ஏந்திச் செல்லும் எங்களை, உங்களைப் போன்ற குள்ளநரி கூட்டத்தால் அசைத்துக் கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டுக்கு திமுக மட்டும் எதிரியல்ல. பிரிவினைவாதம் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு அரசியல் செய்யும் உங்களை போன்ற அற்ப புத்தி கொண்ட கட்சிகளும் தான்!

இப்படிப்பட்ட தீயசக்திகள் தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகவே புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் அதிமுக எனும் இயக்கம் கண்டனர். இன்று உங்களை எதிர்க்கும் இந்த பாதை பெரியாரின் பாதை- அண்ணாவின் பாதை- தலைவரின் பாதை- அம்மாவின் பாதை.

இது தமிழ்நாடு! எங்க நாடு! என் தாத்தன்- பூட்டன் இருந்து பார்த்து கட்டுன எங்க வீடு. எங்கிருந்தோ வந்த கரையான்களை இதை நாசமாக்க விடுவோமா? கொரோனாவில் இருந்து எங்கள் மக்களைப் பாதுகாத்த எங்கள் தலைவருக்கு, உங்களிடம் இருந்தும் மக்களை காப்பாற்றத் தெரியும் முடிஞ்சதைப் பார்?’’ என கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal