நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான், 2021ல் தமிழ் தேசிய புலிகள் என தனிக்கட்சியைத் துவங்கினார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு இந்த கட்சியின் பெயரை ஜனநாயக புலிகள் என மாற்றினார்.

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் மன்சூர் அலிகான் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அதிமுகவுடனான கூட்டணி சுமுகத்தை எட்டாததால் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கியிருக்கிறார் மன்சூர் அலிகான். சமீப காலத்தில் விதவிதமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் மன்சூர் அலிகான், ரம்ஜான் தினமான இன்று கீத்துகொட்டாய் போட்ட வண்டியில் இருந்தபடி இந்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ” முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. சில பேர் திமுகவைவிட்டு பிரியமாட்டார்கள்.. ஆனால், சில தோல் பேக்டரி அதிபர்கள், ஜமாத்கார்கள், சில லேட்டார் பேடு முஸ்லிம் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவு பெற்றவர்கள் அவர்கள் இல்லை.. எனக்கு வாக்களத்து பாராளுமன்றம் அனுப்பினால், நான் உங்கள் அடிமையாக வேலைப் பார்ப்பேன்.. ரொம்ப சாதாரணமா கீத்துக் கொட்டாய் வண்டியை கட்டிக்கொண்டு, எளிமையாக ஓட்டு கேட்கிறேன்..

என்ன எதிர்த்து நிர்ப்பது பெரிய கோடீஸ்வாரர்கள்.. மிகப்பெரிய சக்திகள், அது தீய சக்திகளா என தெரியாது.. ஒரு பக்கம், மலையை குடைந்து விற்றுவிட்டார்.. மணலை அள்ளி விற்றுவிட்டார்.. இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வந்து ஓட்டு கேட்கிறார்.. போனமுறை வாக்கு கேட்டு வந்தார்கள்.. இப்போதும் வருகிறார்கள்.. கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு என்ன கிடைத்தது.. எம்.பி. சீட்டு என்ன மாமியார் வீட்டு சீதனமா??

நான் வந்து இருக்கேன்.. பலாப்பழத்துக்கு ஓட்டு போடுங்க.. என்ன மாதிரி ஒரு இளிச்சவாயன் கிடைக்கமாட்டான்.. என்னப்போல வேலை பார்ப்பவனும் கிடைக்கமாட்டான். எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்கவைத்தால் நாயை கட்டிப்போட்டு வேலை வாங்குவதுபோல வாங்கலாம்” என பரபரப்பாக பிரச்சாரத்தை செய்திருக்கிறார் மன்சூர் அலிகான்.

மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதியில் பசுபதி(அதிமுக), AC ஷண்முகம்(பாஜக), கதிர் ஆனந்த்(திமுக), மகேஷ் ஆனந்த் (நாதக) ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal