கோவை பா.ஜ.க. வேட்பாளரும், தமிழக பா.ஜக. தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘களத்தில் இருப்பவர்களின் பெயர்களையே பிரதமர் மோடி குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ போய் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். மக்களை தரிசிப்பதற்காகவே பா.ஜ.க. தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். பா.ஜ.க தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல. மக்கள் தரிசன யாத்திரை. தமிழகத்தில் பிரிவினை சக்திகள் ஒடுக்கப்படுவார்கள் என்பது மோடியின் உத்தரவாதம். பா.ஜ.க. மீது கடந்த 50 ஆண்டுகளாக போலியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மீது உருவாக்கப்பட்ட பிம்பம் 2024 தேர்தலுக்கு பின் சுக்குநூறாக உடைந்து போகும்’ , இவ்வாறு அவர் கூறினார்.