தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4  ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது: திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. பீகாரில் மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் அது நடக்கவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தி.மு.க. அரசு நடத்தாது. தி.மு.க.விற்கு நீங்கள் தொடர்ந்து வாக்களித்து இருந்தால் உங்கள் உரிமையை நீங்கள் இழக்கப்படுவீர்கள்.

நோயாளிகள் உருவாகாத ஒரு சமூக சமுதாயத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறிய காங்கிரசுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் மு.க.ஸ்டாலின். காவிரிநதி நீரை கொடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் பா.ஜ.க., காங்கிரஸ்  தோற்கடிக்கபடுவீர்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக பேசாத பாஜக தற்போது கச்சத்தீவை பற்றி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார். பா.ஜ.க. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் அரசியல் ஆகும். 
6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என்பதை மாற்றி 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என மாற்றப்பட வேண்டும். ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது.

ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு சீமான் வாக்கு சேகரித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal