கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது: “நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். யார் துரோகி என்பது மக்களுக்கு தெரியும் அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. 2 கட்சிகள் நாட்டை ஆட்சி செய்தது போதும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டை அரைகுறையாக இ.பி.எஸ்., கொடுத்தார். வன்னியர் இட ஒதுக்கீடு கொடுத்தால் கூட்டணிக்கு தயார் என்று அதிமுகவிடம் கூறினோம்.

நாங்கள் உழைப்பாளிகள், எங்களை நம்பி வந்தவர்களுக்கு நாங்கள் உயிரை கொடுப்போம். வெற்றி பெற வைப்போம். இ.பி.எஸ் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் ஒரு பக்கம் குடியையும், போதையையும் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவர்கள் ஆட்டத்தை ஆடுகின்றனர். மதுவை கொடுத்து 3 தலைமுறை இளைஞர்களை சிதைத்து விட்டனர். போலீசாரை சுதந்திரமாக செயல்பட விட்டால் சிறப்பாக செயல்படுவார்கள்”. இவ்வாறு அன்புமணி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal