கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்ல காரில் வந்தார். அப்போது பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை குழு அதிகாரி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று பண்ருட்டிபகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal