ராஜ்யசபா எம்.பி.,யாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 12 பேர் இன்று பதவியேற்றனர்.

ராஜ்யசபாவில் உள்ள எம்.பி.,களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 54 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

இதில் பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கால்நடைத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபாலா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் முருகன் ஆகிய 7 அமைச்சர்களும் அடங்கும். இவர்கள் 7 பேருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று எல்.முருகன், தர்மஷிலா குப்தா, மனோஜ் குமார் ஜா, சஞ்சய் யாதவ், கோவிந்த்பாய் லால்ஜிபாய் தோலாகியா, சுபாஷ் சந்தர், ஹர்ஷ் மகாஜன், ஜி.சி. சந்திரசேகர், அசோக் சிங் சந்திரகாந்த், ஹந்தோர் மேதா, விஸ்ராம் குல்கர்னி, சாதனா சிங் ஆகிய 12 பேர் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றனர். அவர்களுக்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் அவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal