மக்களவைத் தேரதல் பிரச்சாரத்திற்கு தமிழகத்திற்கு 4 நாள் பயணமாக பிரதமர் மோடி வருகிறார். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்

  • ஏப்ரல் 9ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி காலை வேலூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாகன பேரணி, மாலை தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பேரணியாக சென்று பரப்புரை மேற்கொள்கிறார்.
  • ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து வாகன பேரணியும், கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார்
  • ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
  • ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal