சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று அரியலூர் ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டார்.

அரியலூர் அருகே வாலாஜா நகரத்தில் திருமாவளவன் அளித்த பேட்டியில்:
‘பா.ஜ.க அரசு மக்களிடையே மத உணர்வுகளை தூண்டுவதில் செலுத்திய கவனத்தை நாட்டு நலனில் செலுத்தவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் சீனா நமது தேசத்தை ஆக்ரமித்து வருகிறது. அருணாசலப்பிரதேசத்தில் நமக்கு சொந்தமான பகுதிகள் மற்றும் நதிகளை தங்கள் தேசத்திற்குட்பட்ட பகுதி என சீனா அறிவித்திருப்பது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது.

அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை கட்டமைப்போம், கழகங்கள் இல்லாத தமிழகத்தை கைப்பற்றுவோம் என பாஜவினர் தம்முடைய அரசியல் ஆதாயத்திற்கான அரசியலை மட்டுமே செய்து வருகின்றனர். பெரும்பான்மையான இந்து சமூகத்தினர், இந்துக்களுக்கு விரோதமான கட்சியாக பா.ஜ.க உள்ளது என உணர ஆரம்பித்து விட்டார்கள். கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பறிப்பதற்காக அவர்கள் நடத்துகிற நாடகம். இதனை கைவிட்டு சீன அரசால் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’, இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal