பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சென்றார். அங்கு கோட்புடி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பா.ஜ.க. முதலில் தேசம் என்று இருக்கிறது, மறுபுறம் நாட்டைக் கொள்ளையடிக்க வழிகளைக் கண்டுபிடிக்கும் காங்கிரசும் இருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு குடும்பமாக பா.ஜ.க. கருதுகிறது. தேசத்தைவிட தங்கள் குடும்பத்தைக் காங்கிரஸ் பெரிதாக கருதுகிறது.

காங்கிரஸ் வெளிநாட்டிற்குச் செல்லும்போது நாட்டை துஷ்பிரயோகம் செய்துவரும் நிலையில், பா.ஜ.க. நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது. ஆத்மநிர்பர் பாரத் கனவை நனவாக்கவே இந்த தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நாட்டிற்காக போட்டியிடவில்லை, தங்கள் சுயநலத்துக்காக போட்டியிடுகிறது. ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ்  கட்சி தலைவர்கள் பேசாமல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாடு தீப்பற்றி எரியும் என மிரட்டும் முதல் தேர்தல் இது என தெரிவித்தார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal